அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஊடகவியலாளர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஹபரணை அருகே இன்று(17) நடைபெற்றுள்ளது.
திருகோணமலை கந்தளாயைச் சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34) என்பவரே, இன்று அதிகாலை ஹபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளதால், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரலவின் ஊடகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ஆனதி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri