சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முற்பட்டவர் மீது தாக்குதல் - ஊடகவியலாளருக்கும் கொலை அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு ஆழியவளை பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தட்டிக்கேட்ட குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த செய்தியை சேகரித்தமைக்காக சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ்சிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழ்வு
வடமராட்சி, கிழக்கு ஆழியவளை பகுதியில் வீடு ஒன்றில் கூலி வேலை செய்பவர்கள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுத்து நிறுத்த முற்பட்ட அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் மீது மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் குறித்த குடும்பஸ்தரின் கையில் இருந்த கமராவையும் பறித்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகவியலாளருக்கும் கொலை அச்சுறுத்தல்
இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை செய்தியாக்கிய வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் என்பவரிற்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரினால் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் வெற்றிச்சான்றிதழ் பெற புறப்பட்ட விஜய் - வெற்றிபெற்ற தவெக வேட்பாளர்களுக்கும் அழைப்பு