அதிகரித்துள்ள பரீட்சை மோசடிகள்: திணைக்களத்தை மாற்றியமைக்குமாறு கோரிக்கை
இந்த ஆண்டில் இதுவரை 473 பேர் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்நிலையில், அவர்களுக்கு எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம் மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது.

இவ்வாறான நிலையில், திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri