ரணில் ராஜபக்ச அரசு இனவாதத்தை கையிலெடுத்துள்ளது: ஜோசப் ஸ்டாலின் விசனம்(Video)
சனல் 4 காணொளி மூலம் வெளியான தகவல்களினை பார்க்கும்போது கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்காக செய்யப்பட்ட முயற்சி என்ற சந்தேகங்கள் எழுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் ராஜபக்ச அரசு தங்களுடைய இருப்பிற்காக இனவாதத்தை கையிலெடுத்துள்ளதை நாம் தற்போது பார்க்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீதான தாக்குதல் பின்னணியில் அரசு தலையிடவில்லை என்று காட்டுவதாக இருந்தால் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு இதற்கு சாதகமாக இருந்துள்ளது என்பது வெளிப்படும்.
ஜனநாயக ரீதியான தேர்தல்
நாடாளுமன்ற உறுப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும். உலகத்திற்கு சிலர், ''நாங்கள் நிலைமாறும் நீதி, சமாதானம், சமத்துவம் தமிழ் மக்களின் உரிமைகள் என்பவற்றை வழங்குகின்றோம்'' என சர்வதேச ரீதியாக பேசிவருகின்றார்கள்.
தற்போதுள்ள அரசிற்கு மக்கள் ஆணை கிடையாது ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு வர முடியாது.
மேலும், இந்த அரசானது இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்கும் பொழுது காணிகள் நிர்மாணிக்கும் பொழுது நடைபெற்ற பிரச்சினைகளை நாங்கள் அவதானித்துள்ளோம்.
இது போல செயற்பாட்டால் நாடு மிகவும் பின்னோக்கி தள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.



