யாழில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு!
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றைதினம்(25.12.2025) மாலை யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி அனுஷ்டிப்பு
இதன்போது, அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2 ஆயிரத்து 5ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam