தெளிவத்தை ஜோசப், சாலிய குணவர்தனவின் சிறுகதை தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியீடு
இலங்கையின் முன்னணி சிறுகதை எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப் மற்றும் சாலிய குணவர்தன ஆகியோர் எழுதி சிறுகதை தொகுதிகள் வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் இன்று இடம்பெறுகின்றது.
டொக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் இன்றையதினம்(9) காலை 09.00 மணிக்கு சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
இதன்போது, தெளிவத்தை ஜோசப் எழுதிய 'தெளிவத்தை ஜோசப் கதைகள்', சிங்களத்தில் சாலிய குணவர்த்தன எழுதி தமிழில் மலரன்பன் மொழிபெயர்த்த 'கொலுஷா' (பிறமொழிச் சிறுகதைகள்) ஆகிய இரண்டு சிறுகதை தொகுதிகளின் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
மலையக சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளர்களான மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்ரமசிங்க, கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுகுழு சார்பில் இந்நூல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் முன்னணி எழிலினி பதிப்பக கோ.ஒளிவண்ணன் 'தெளிவத்தை ஜோசப் கதைகள்' என்ற தொகுதியையும், ஹட்டன் யூனிவர்சல் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர், எம். மெய்யநாதன் 'கொலுஷா என்ற தொகுதியையும் பதிப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்வின்போது, எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி தமிழ்துறைத் முனைவர் மணிமேகலை வரவேற்புரையும், முனைவர் சத்தியபிரியா நன்றியுரையும் வழங்குகின்றனர்.
இவ்வெளியீட்டு விழாவில் முன்னணி கவிஞர் சல்மா முன்னிலை வகிக்க, பிரதம விருந்தினராக தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினரும், மூத்த பத்திரிகையளருமான கோவி.லெனின் மற்றும்டொக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டொக்டர் குமார் ராஜேந்திரன் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
மலையக சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளர்களான மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க, கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுகுழு சார்பில் இந்நூல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வெளியிட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுகுழு செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்க, எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி அலுவலக சிரேஷ்ட அதிகாரி கவிதா ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
