இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!
இந்தியா - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ரா சக்தி இலங்கையின் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சியகத்தில் ஆரம்பமாகியுள்ளது
இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
106 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவினர் இலங்கை இராணுவத்துடனான கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டு இராணுவ திறன்
இந்த பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் மித்ரா சக்தி என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும்.

இதன் கடைசி பதிப்பு நவம்பர் 2023 இல் புனேயில் நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக் கட்டளையின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri