வடக்கு–கிழக்கு இணைந்த நில மீட்புச் செயலணியை உருவாக்க வலியுறுத்தல்
கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுடனான நில உரிமைக்கான ஒருங்கிணைந்த கள விஜயமும் ஒன்றிணைவு கலந்துரையாடலும் இன்று (14.05.2026) வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் இரண்டாம் நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர், மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள்
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றதுடன், வவுனியா மாவட்டத்தில் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

கலந்துரையாடலின் போது நில மீட்பிற்கான வலையமைப்பினை வடக்கு மாகாணத்திலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஒருங்கிணைந்த செயற்பாடு காலத்திற்குத் தேவையான ஒன்றாகும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், எதிர்காலத்தில் நில மீட்பிற்காக இணைந்த வடக்கு–கிழக்கு நில மீட்புச் செயலணியாக ஒருங்கிணைந்து செயற்படுவது தொடர்பிலும் முக்கிய ஆலோசனைகள் மற்றும் விருப்பங்கள் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டன.
அதேவேளை, வடக்கு–கிழக்கு மக்களின் நில உரிமை பாதுகாப்பிற்கான இணைந்த செயற்பாட்டின் தொடக்க நாளாக இன்றைய தினத்தை அடையாளப்படுத்தி வலையமைப்பை பிரகடனப்படுத்தும் எண்ணமும் கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்டது.
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு : அடுத்த 48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை



Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan