தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய கோட்பாடுகள்! தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள கடிதம்

Sri Lanka Politician Sri Lanka
By Dhayani Dec 20, 2022 10:46 PM GMT
Report

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளன.

இக்கடிதத்தைக் கனேடிய தமிழர் தேசிய அவை, டெனிஷ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம், இத்தாலி ஈழத் தமிழர் மக்கள் அவை, தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு, ஜேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை, நியூசிலாந்து தமிழர் தேசிய அவை, நெதர்லாண்ட் ஈழத் தமிழர் பேரவை, நோர்வே ஈழத் தமிழர் அவை, சுவிஸ் ஈழத் தமிழரவை, தமிழர் பண்பாட்டுக் கழகம் பெல்ஜியம் ஆகிய அமைப்புக்களே கூட்டாக அனுப்பி வைத்துள்ளன.

தமிழ் மக்கள் சரர்பில் இலங்கை அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முன்னர் கீழே தரப்பட்டுள்ள தமிழ் மக்களினது பேரம்பேசப்பட முடியாத அடிப்படைக் கோட்பாடுகளையும் பிற முக்கிய அம்சங்களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற்கொள்ள வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய கோட்பாடுகள்! தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள கடிதம் | Joint Letter From Tamil Diaspora Organisations

அடிப்படை கோட்பாடுகள் மற்றும் பிரதான அம்சங்கள்

1. இலங்கைத் தீவில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரச் சிக்கலோடு பொறுப்புக் கூறல், தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி வழங்கல் ஆகிய பாரிய அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடன் தாம் நல்லிணக்கத்தை பேண முயற்சிப்பதாக அனைத்துலகச் சமூகத்திற்குக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

எழுபது ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வந்த அரசுகளின் ஏமாற்று வரலாற்றின் பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்தைகளுக்கு வருமாறு சனாதிபதி அழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

2. ஓற்றை ஆட்சி முறையிலான தற்போதைய அரசியலமைப்பு, அதன் 13 ஆம் சட்டதிருத்தம், ஏற்கனவே தோல்வியடைந்த மாகாணசபை முறைமை ஆகியன தமிழர் தேசிய இனத்தின் நியாயபூர்வமான அபிலாசைகளைத் தீர்ப்பனவாக இல்லை.

நாட்டின் இந்த ஓற்றையாட்சிப் படிநிலைக் கட்டமைப்பு அகற்றப்படும்வரை சமஸ்டி முறையான ஒர் அரசியலமைப்புக்கூட நடைமுறைச் சாத்தியப்பட மாட்டாது.

3. இந்திய அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்கள் பேரவையின் 2016 ஆம் ஆண்டைய முன்மொழிவுகள் உட்பட வரலாற்று ரீதியாகப் பல தடவைகள் தமிழ் மக்கள் தம் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் தொடர்பான முக்கிய கோட்பாடுகள்! தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள கடிதம் | Joint Letter From Tamil Diaspora Organisations

பேரம் பேசமுடியாத அந்த அடிப்படைக் கோட்பாடுகள்

1) தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்

2) தமிழ் மக்கள் விட்டுக்கொடுக்க முடியாத தன்னாட்சியுரிமை உடையவர்கள்

3) வரலாற்று ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரித்தெடுக்க முடியாத ஒன்றிணைந்த தமிழர் தாயகமாக இருந்து வந்துள்ளது.

தமிழ் மக்களின் இம் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அங்கீகரித்த பின்னரே எந்தப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட வேண்டும். 

மேலும், எந்த உத்தியோக பேச்சுவார்த்தைகளின் போதும் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களாகத் தமிழ் மக்கள் பேரவை (TPC) 2016 ஆண்டின் முன்மொழிவுகளில், பின்வருவன எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்பதனையும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.

4. எந்தவொரு அரசியலமைப்பையும் வகுக்க முனையும் முன்னர் ஓர் ஒப்பந்த வடிவில் (டேயிற்ரன் ஒப்பந்தம் மற்றும் பெரிய வெள்ளி ஒப்பந்தம்), போன்ற அரசியலமைப்புக்கு முன்பான ஒப்பந்தம் ஒன்று அவசியம்.

இந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, அதன் இறையாண்மை, அதற்குரிய ஆட்சி அதிகாரங்கள் ஆகியனவற்றோடு தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த அவர்களது பாரம்பரியத் தாயகம் ஆகியன அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. மேலும் இந்த ஒப்பந்தத்தில் மற்றைய அம்சங்களோடு பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமான வழிமுறைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், அரசியற் கைதிகளின் விடுதலை, இராணுவத்தால் வடக்கு-கிழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்றுதல், அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்களை நிறுத்துதல், பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தம், ஆகியவற்றோடு இவ்வாறான குற்றங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாதிருப்பதற்கான உத்தரவாதம் ஆகியன உள்ளடக்கப்பட வேண்டும்.

மேற்கூறியவற்றைச் செயற்படுத்துவதற்கான நிலைமைகள் வடக்குகிழக்கில் உருவாக்கப்பட்டாலேயன்றி அரசியல் மற்றும் அரசியலமைப்பு ஆகியனபற்றிச் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான சூழல் உருவாக முடியாது.

6. ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள ஏதாவதை எண்ணிக்கையில் கூடிய சிங்கள பவுத்த பெரும்பான்மையினரோ அவர்களின் அரசியல் பிரதிநிதிகளோ பக்கச் சார்பாக இரத்துச் செய்தால், ஒப்பந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கான பிறிதேதும் சாத்தியமான வழிமுறைகள் இல்லாவிடத்து, தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்கென ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறைறையை எந்த ஒப்பந்தமும் கொண்டிருத்தல் அவசியம்.

7. அவ்வாறான ஒப்பந்தமானது மூன்றாம் தரப்பு ஒன்றினால் எழுத்துறுதி செய்யப்படுதல் வேண்டும். இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்கின்ற எல்லா உத்தியோக பேச்சுவார்த்தைகளின் போதும், தமிழ் மக்களின் மேற்கூறிய அடிப்படைக் கோட்பாடுகளையும் முக்கிய அம்சங்களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் முதன்மை அமைப்புக்கள் வலுவாக வற்புறுத்தியுள்ளன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பேரம்பேச முடியாத தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைய, பேச்சுவார்த்தைகளில் நடுவர்நிலை வகித்து பங்காற்றுமாறு அனைத்துலகச் சமூகத்தை நாம் வேண்டிக் கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்ட பின்னரே இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென IMF, உலக வங்கி (WB) மற்றும் ADB உட்பட அனைத்துலகச் சமூகத்திடம் வற்புறுத்துகின்றோம் என  கனேடிய தமிழர் தேசிய அவை தெரிவித்துள்ளது.


 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US