சர்வகட்சி மாநாட்டை உடன் கூட்டுக! - அரசிடம் மைத்திரி வலியுறுத்து
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வகட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற அரச பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்படி யோசனையை அரசிடம் முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முக்கியமாக அதேபோல முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய விடயங்களுக்கே அரசு ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வீதி புனரமைப்பு போன்ற பணிகளை உடன் நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மருந்து பொருட்களை வாங்குவதற்கான டொலர்களை திரட்டிக்கொள்ள வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் கூட்டணி ஒன்றை அமைத்தோம்.
தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணி கூடவே இல்லை. எமக்கு அரசுக்குள் கதைப்பதற்கு இடமும் இல்லை. எனவே தான் இப்படியான கூட்டங்களை நடத்தி யோசனைகளை முன்வைக்கின்றோம்.
எதிரணிகளும் ஆட்சி மாற்றம் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டை மீட்பதற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri