அரசாங்கத்திற்கு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்துள்ள எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் காட்டுச் சட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கத்துடன் மக்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பில் அவர் தனது விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அநுரவின் கூட்டம்..
பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேனவினால் நடத்தப்படும் தன்சல்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் கூட்டம் கூட அநுரவின் கூட்டத்தில் இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அனுராதபுரத்தில் தங்களது கட்சி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததனர் எனவும் மக்கள் தற்பொழுது தங்கள் பக்கம் திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அரசாங்கம் கூறிய பொய்கள் அம்பலமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பொலனறுவையில் ஒன்றையும் அனுராதபுரத்தில் வேறொன்றையும் ஜனாதிபதி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் காலம் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார் அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதியில் அரசாங்கம் எவ்வாறான ஓர் முடிவை எதிர்நோக்கும் என்பதை பாருங்கள் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்