நாடாளுமன்றத்திற்கு பொருந்தாத வார்த்தைகள்! ஜோன்ஸ்டன் - கிரியெல்ல வாக்குவாதத்தால் சபையில் அமளி
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் இடையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை சம்பந்தமான வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் இன்று அமளி ஏற்பட்டது.
இதன் போது இரண்டு பேருக்கும் இடையில் சபைக்கு பொருந்தாத சில வார்த்தைகள் பேசப்பட்டன. இரண்டு பேருக்கும் இடையிலான வாக்குவாதத்தை நிறுத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
சபையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்.
லக்ஷ்மன் கிரியெல்ல : மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமை - குருணாகல் இடையிலான பகுதியை விரைவாக திறக்குமாறு கோருகிறேன். அதனை திறக்க முடியும் என பொறியியலாளர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ : கடந்த நல்லாட்சி அரசாங்கம், இந்த வீதியை நிர்மாணிக்க ஒரு கிலோ மீற்றருக்கு 17 ஆயிரம் லட்சம் ரூபாயை மேலதிகமாக வழங்கியது. தொடக்கம், முடிவின்றி வீதி நிர்மாணிக்கப்பட்டது. இவற்றை செய்தவர்கள் தற்போது சிறையில் இருக்க வேண்டும்.
( சபையில் கோஷம்)
லக்ஷ்மன் கிரியெல்ல : நான் கள்ளச் சாரயம், கசிப்பு காய்ச்சியவன் அல்ல. நாடாளுமன்ற அவையில் நாற்காலி, பைபிளை தூக்கி அடித்தவன் அல்ல. என்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டாம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதால், என் மீது சேறுபூசுகின்றனர். வீதி எப்போது திறக்கப்படும் என்றே நான் கேட்டேன்.
( ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடுகின்றனர்)
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ : இவர், வெறுமனே புத்தகம் ஒன்றை பைபிள் என்கிறார். நீங்கள் வெறுமனே பரிதாபத்திற்கு உள்ளாக வேண்டாம். இருமுகம் கொண்ட அரசியல்வாதி.
( சபையில் மீண்டும் கோஷம்)
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன : இந்த இடத்தில் பைபிள் எதுவும் இல்லை.