இலங்கைக்கு சமிக்ஞை காட்டிய ஜோ பைடனின் அதி முக்கிய அறிவிப்பு (VIDEO)
இலங்கை கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சமயத்தில் அமெரிக்காவின் திறைசேரி அதிகாரிகள் நேரடியாக இலங்கை வந்துள்ளமையானது இலங்கையை பொருத்தமட்டில் ஒரு சமிக்ஞையை கொடுத்திருப்பதாக கருதலாம் என கலாநிதி கணேசமூர்த்தி பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைகழகம்) தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரையில் அமெரிக்கா என்பது முக்கியமான ஒரு நாடு. அமெரிக்காவின் தீர்மானங்கள் இலங்கைக்கு தற்போது அத்தியாவசியமாக தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு நாட்டில் பெட்ரோல் மூன்று மாதங்களின் பின்னர் தான் நாட்டிற்கு வரும் என்பதினை மக்களுக்கு அறிவிக்க ஒரு அரசாங்கம் தேவையா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் நாட்டில் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போது பயணங்கள் தடைப்பட்டுள்ள சமயத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரித்துள்ளமையினால் பயணங்கள் குறையும் போது நாடு ஓரிடத்திலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
