கமலா ஹாரிஸை ஜனாதிபதியென அழைத்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸை 'ஜனாதிபதி' என கூறியது சமூக வளைதளங்களில் கேளிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
எதேர்ச்சையாக வார்த்தை தவறி கூறிய அந்த வீடியோவை இணையத்தள வாசிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே பதவி ஏற்பதற்கு முன்பு ஒரு முறை, கமலா ஹாரிஸை 'President-Elect' என அவர் தவறுதலாக அழைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீண்டும் கமலா ஹாரிஸை'President' என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் ஜோ பைடனுக்கு Dementia எனும் மூளை நோய் இருக்கின்றதா என சமூக ஊடகங்களில் கேலி செய்து வருகின்றனர்.
இதேவேளை,மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டில் பண மோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் வட கொரியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை வடகொரியா துண்டித்துள்ளது.
இச்செய்திகள் தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,