சவூதி அரேபியாவில் 200,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சவூதி அரேபியா 2023 ஆம் ஆண்டில் 200,000 இலங்கைப் பணியாளர்களை தமது நாட்டுக்கு வரவழைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா 2022 இல் இலங்கைக்கு 54,000 வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் பணியாளர்களின் எண்ணிக்கை
அதேநேரம் 2022 இல் 300,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வெளிநாட்டுத் பணியாளர்களின் பணம் இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் 2022இல், இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் சுமார் 3.8 பில்லியன்
டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தரவு காட்டுகின்றது.





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
