திறைசேரிக்கு 3 பில்லியனை வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று திறைசேரிக்கு ரூ. 3 பில்லியனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற வருமானத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளது.
புற்றுநோய் வைத்தியசாலைக்கு 500 மில்லியன் ரூபா அன்பளிப்பு
இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3382 மில்லியன் ரூபாவாகும். மூன்று பில்லியன் ரூபா ஒரே நேரத்தில் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபா காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் காசோலையை கையளித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
