பல அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் தொழில்வாய்ப்பு
இலங்கையின் பல அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க மற்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகள் ரண்டுலா குணவர்த்தன ஆகியோரும் அடங்குகின்றனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்கவின் மகள் சுபாஷினி சமரநாயக்கவும் வெளிநாட்டில உள்ள இலங்கை தூதரகத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ளார்.
தம்மை இனங்காட்டிக்கொள்ளாத வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த நியமனங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த நியமனங்கள் தகுதியானவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகள் ரண்டுலா குணவர்த்தன உயர் கல்வித்தகுதியை பெற்றுள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் அவருக்கு நியமனம் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்தின் மூன்றாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தமது மகளுக்கு முன்னைய அரசாங்கத்தின்போது இந்த தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவினால் அரசியல் நியமனமாக இது வழங்கப்பட்டது.
தமது மகள் அவுஸ்திரேலிய கென்பராவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரத்தில் மூன்றாம் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் மொஹான் சமரநாயக்க மற்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோரிடம் அவர்களது மகள்மாரின் நியமனங்கள் தொடர்பில் கருத்துக்களை பெற முடியவில்லை.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
