ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் - ஜிஹான் ஹமீட்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக ஜிஹான் ஹமீட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசியான ஜிஹான் ஹமீட், பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் இந்தநியமனம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த நியமனம் கட்சித் தலைமையின் முடிவு என ஹமீட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஹமீட்டின் நியமனத்தை கட்சி இன்னும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

ஜிஹான் ஹமீட்டின் எதிர்பார்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை, இலங்கைக்கு வெற்றிகரமான சக்தியாக மாற்றுவதற்கு தலைவர்கள் மற்றும் விசுவாசிகளுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஹமீட் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹமீட் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் நியமனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியை ஏற்க மறுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அதிகாரியாக ஜிஹான் ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுவதை ஜிஹான் ஹமீட் மறுத்துள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan