விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு - கிழக்கு பிரதேசங்கள் இருந்த சந்தர்ப்பத்தில், அவர்களால் சேமிக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இராணுவம் ஒரு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தலையீட்டால், 2014 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, இந்த தங்கப் பொருட்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
யுத்த முடிவு
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த முடிவின் பின்னர், முழு வடக்கு மாகாணமும் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரப்பட்டது.
இராணுவத்தால் அப்போது கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பெறப்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டினர்.
உண்மையில், தங்கப் பொருட்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து திகதிகள் மற்றும் ஆதாரங்களுடன் தெளிவான வெளிப்படுத்தல் காணப்படுகிறது.
வங்கிகளில் உள்ள தங்கப் பொருட்களின் ஆவணங்களுடன் தொடர்புடையவர்களைத் தேடுவதற்காக இராணுவம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது.
தங்கம் தொடர்பான ஆவணங்கள்
மகிந்தவின் தலையீட்டால், 2014 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, இந்த தங்கப் பொருட்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது தங்கம் தொடர்பான ஆவணங்கள் உரியவர்களால் கொண்டு வரப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையை நிரூபிக்க தெளிவான ஆவணங்களுடன் ஏராளமான ஆதாரங்கள் இணையத்தில் உள்ளன.
உரிமை கோரப்படாத நகைகளே இவ்வாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இவ்வளவு காலமும் இருந்து வந்தன.
இந்த நகைகளை தேர்தலை இலக்கு வைத்தே இராணுவத்திடம் இருந்து பெற்று பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஒரு நகர்வை தற்போதைய அரசாங்கம் முன்னேடித்திருந்தது.
குறிப்பாக இராணுவமும் பொலிஸாரும் அண்ணன், தம்பி போன்றவர்கள் என்பதை நினைவில் நாம் கொள்ள வேண்டும்.
ஆனால், சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் இன்னும் மகிந்த இந்த தங்கத்தை தனது நெருங்கிய குடும்ப நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்று நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
