யாழ். வழக்கம்பரையில் நகை திருட்டு: பொலிஸ் பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற பதில்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை நகை திருட்டு போயுள்ளது.
குறித்த வீட்டில் வயோதிபப் பெண்ணொருவர் தனித்து வசித்து வந்த நிலையில் நேற்று (07.11.2023) அதிகாலை இந்த களவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தாவினைத் தொடர்புகொண்டு கேட்டவேளை, அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
எத்தனை பவுண் நகை திருட்டு போயுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது வினவியவேளை தற்போது தான் விசாரணை இடம்பெறுகிறது.

விசாரணை முடிந்த பின்னர் எத்தனை பவுண் என கூற முடியும் என கூறினார்.
முறைப்பாடு பதிவு செய்யும்போது எத்தனை பவுண் களவாடப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டாளர் கூறியிருப்பார் தானே என்று கேட்டவேளை, முறைப்பாட்டாளருக்கும் சரியாக தெரியவில்லை, அவர் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து கூறுவதாக கூறியதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri