யாழில் 900,000 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு: இருவர் கைது!
9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் தங்க நகையை திருடிய பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயம் ஒன்றில் சுமார் 900,000 இலட்சம் பெறுமதியான நகை திருடிய கும்பலை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளவாலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (05.03.2023) நடைபெற்ற உற்சவத்தில் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் 26 வயதுடைய ஒரு ஆணும், 43 வயதுடைய ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த கும்பலிடமிருந்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகையும், மேலும் திருடப்பட்ட ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் இன்றையதினம் (26.03.2023) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
9 பேர் தலைமறைவு
கச்சத்தீவு பெருந்திருவிழாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சேர்ந்தியங்கிய 9 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் ஆகியோர் தெரிவித்ததாவது:-
விசாரணை
"கச்சத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளோம். அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தினோம். எதிர்வரும் 14ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழகம் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினதும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினதும் 12 பவுண் நகைகளே களவாடப்பட்டுள்ளன.
இதேவேளை, கச்சத்தீவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க ஆபரணத்தை ஒருவர் அறுத்துச் சென்ற நிலையில் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார். ஆனால் அவரிடமிருந்து நகைகள் எவையும் மீட்கப்படவில்லை.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், மன்னாரின் பியர் கடற்கரையிலிருந்து தனியான படகில் 10 பேர் கச்சத்தீவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகப் பெண்ணிடம் அறுத்த தங்க நகையைத் தனது மனைவியிடம் கொடுத்துள்ளதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் பொலிஸாரிடம் பிடிபட்டதைத் தொடர்ந்து அவருடன் வந்த மனைவி உள்ளிட்ட ஏனைய 9 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.




