மட்டக்களப்பில் சுற்றுலா பயணிகளிடம் நகை கொள்ளை: ஒருவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடம் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி கின்தோட்டையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் காத்தான்குடி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது, குறித்த சுற்றுலா விடுதியின் மதில் மேலால் உள்ளே நுழைந்து சுற்றுலாப் பயணிகளின் கைப்பையிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இவர் இருவரிடமிருந்து 42,500 ரூபா பணத்தையும் மேலும் சிலரிடமிருந்து நகைகளையும் கொள்ளை இட்டவுடன் நகைகளை வாழைச்சேனையிலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளார்.
அத்துடன், விற்பனை செய்த பணம் மற்றும் கொள்ளையிட்ட பணம் ஆகியவற்றிற்கு சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளை வாங்கி பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது. மீதமாயிருந்த இரு தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், 43 வயதுடைய போதைப்போருள் பாவனைக்கு அடிமையான நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
