வற்றாப்பளை ஆலயத்தில் நகை கொள்ளை சம்பவங்கள்
வடக்கு கிழக்கில் பல இலட்சம் பக்கதர்கள் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், பக்தர்களோடு பக்தர்களாக திருடர்களும் தங்கள் கைவரிசையினை காட்டி உள்ளனர்.
நேற்று (05.06.2023) மாலை வரை 17 பக்தர்களிடம் நகை கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆலய பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பல பக்தர்கள் தவறவிட்ட கைப்பை மற்றும் நகைகள் என்பன நல்ல உள்ளம் கொண்ட பக்தர்களால் எடுத்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில், நேற்றைய தினம் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆலய பொங்கல் நிகழ்விற்காக ஆயிரம் வரையான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |