ஜெருசலேம் தீவிரவாத தாக்குதலில் கனேடிய சிறுவன் பரிதாபமாக பலி! பிரதமர் கடும் கண்டனம்
ஜெருசலேமில் பேருந்து நிறுத்தங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான வெடிகுண்டு தாக்குதல்களில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் புறநகரில் உள்ள இரண்டு பரபரப்பான பகுதிகளில் மக்கள் சேர்ந்திருந்த நேரத்தில் இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த சிறுவன் 15 வயதுடைய கனேடிய மாணவர் ஆரே ஷூபக் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கண்டனம்
இத் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Incredibly saddened to learn about the death of a young Canadian in the terrorist attack in Jerusalem. I’m sending his family and friends my deepest condolences. I’m also thinking of those who were injured. Canada condemns this violence in the strongest possible terms.
— Justin Trudeau (@JustinTrudeau) November 23, 2022
தீவிரவாத தாக்குதலில் இளம் கனேடியர் மரணித்தமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான வன்முறைகளையும் கனடா வன்மையாக கண்டிப்பதாகவம் தாக்குதலில் காயமடைந்த அனைவர் தொடர்பிலும் கரிசனையை வெளியிடுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியள்ளார்.
இதேவேளை, இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மிலேன் ஜோலி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்களுடன் கனடா தொடர்ந்தும் இணைந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரமான தாக்குதல்
இஸ்ரேலின் பிரதம மந்திரி, இது "சமீபத்திய ஆண்டுகளில் நாம் பார்த்ததில் இருந்து வேறுபட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இக்குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் கூறவில்லை.
இருப்பினும், பாலஸ்தீனிய போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய இரண்டும் குழுக்களின் நடவடிக்கை என்று குறிப்பிடப்படுகின்றது.