ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியலில் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு
ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இன்று (27.12.2023) காலை ஜெரோம் பெர்னாண்டோ முற்படுத்தப்பட்ட போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை தாழ்த்தி, கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்னாண்டோ இந்த மாதம் முதலாம் திகதி இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு பயணத்தடை
ஜெரோம் பெர்னாண்டோ அவரது வெளிநாட்டு பயணத்தடை உத்தரவை நீதிமன்றம் வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது இந்த வருடம் மே 14ஆம் திகதி சிங்கப்பூரிற்கு சென்றார்.
தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டாம் என நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பின் நவம்பர் 29ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கை வந்தடைந்தார்.
அதன் பின்னர், இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு டிசம்பர் மாதம் 01ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
