யாழ். நல்லை கந்தன் ஆலய திருவாதிரை உற்சவம் (Photos)
யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10 ஆவது நாள் திருவெம்பாவை உற்சவத்தின் இறுதிநாளின் திருவாதிரை உற்சவம் காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலவனுக்கும் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கான விசேட அபிஷேக ஆராதனைகள் இன்று (27,12,2023) காலை நடைபெற்றுள்ளது.
அபிஷேக ஆராதனைகள்
எம்பெருமான் மயில் வாகனத்தில் சமேதராக உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வைகுந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
இதில் பல பகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்டசித்திகளை
பெற்றுச்சென்றனர்.

வட கிழக்கு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
