முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படத்திலிருந்து வசனமொன்றினை நீக்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை
இலங்கையின் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' இல்
இருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலம் அறிவிப்பு
800' படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியான நிலையில், அதில் நடிகர் நாசரால்'தோட்டக்காட்டான்' என்ற வசனம் உச்சரிக்கப்படுகின்றது.

இந்த சொல்லாடலுக்கு மலையக தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமூகமொன்றினை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது..
நீக்கப்படும் என்ற உத்தரவாதம்
இந்நிலையில் '800' முன்னோட்டத்தில் உள்ள இந்த வசனத்தை மாற்றியமைக்குமாறு மக்கள் சார்பில் படத்தின் இயக்குநரிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, '800' திரைப்படத்தில் அந்த வசனம் நீக்கப்படும் என்ற உத்தரவாதம், எழுத்துமூலம் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri