தோட்ட அதிகாரியை தகாத வார்த்தையால் அச்சுறுத்திய ஜீவன்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
மாத்தளை- ரத்வத்த தோட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தவறான செயற்பாடு தொடர்பில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தோட்ட அதிகாரி ஒருவரை நோக்கி தகாத வார்த்தையால் அச்சுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், அமைச்சர் அதிகாரியிடம் கேள்வி கேட்பதையும், அதிகாரி, அதனை மறுத்தபோது, அமைச்சர் ஆக்ரோஷமாக மாறுவதையும் காண முடிகிறது.
இதன்போது ஜீவன் தொண்டமான் அவரது பாதுகாப்பு மற்றும் அவரைச் சுற்றியுள்ள சிலரால் அமைதிப்படுத்தப்பட்டுள்ளார்.
உதவி மேலாளர் பணி நீக்கம்
இந்த நிலையில், மாத்தளை மாவட்டத்தில் உள்ள எல்கடுவ, ரத்வத்த தோட்டத்தில் உதவி முகாமையாளரால் வறிய குடும்பம் ஒன்று துன்புறுத்தப்பட்டதைக் காணொளி ஒன்று வெளிப்படுத்தியதை அடுத்தே, தாம் அங்கு சென்றதாக, தொண்டமான் பின்னர் டுவீட் செய்துள்ளார்.
Today, I visited the Ratwatte Estate in the Elkaduwa Plantation in Matale district, where a distressing video revealed an impoverished family being mistreated by an assistant manager.
— Jeevan Thondaman (@JeevanThondaman) August 20, 2023
?As Minister, I demanded action from the Chairman and General Manager of the Estate against… pic.twitter.com/8HRm8UTr3W
அதில், “அமைச்சர் என்ற முறையில், இந்த நடத்தைக்கு எதிராகத் தோட்டத்தின் தலைவர் மற்றும் பொது மேலாளரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, உதவி மேலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தலைவர், பொது மேலாளர் மற்றும் பொறுப்பு உதவி மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குடும்பம் அடைந்த அவமானத்தை யாரும் தாங்க முடியாது. என் மக்களுக்கு இழிவான இந்த சகாப்தம் என்னுடன் முடிவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




