முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: அமைச்சர் ஜீவன் கோரிக்கை
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில், அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் நிலை
ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றிய நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.
'குருந்தூர்' மலை விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள விவகாரம் நீதித்துறையின் நிலை குறித்து கேள்வியை உருவாக்கியுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலானது நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகும்.
எனவே, நேர்மையுடன் நீதி வழங்குபவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.
மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகின்றேன்.
உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குருந்தூர்மலை வழக்கில் மட்டுமல்ல, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதிலும், நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவுக்கு உண்மையில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா: எடுக்கப்படும் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
