சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo)

Mullaitivu Sri Lanka Politician T saravanaraja
By Shan Sep 30, 2023 10:07 AM GMT
Report

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு(Video)

நீதிமன்றத் தீர்ப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளதாக தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு கொண்டு இருக்கிறது.

இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் உலக அரங்கில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் பதவி விலகலால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo) | Dhu Ravigaran Speech Mullaitivu Judge Resigns

AR-673 (2018) என்ற வழக்கில் பௌத்த விகாரை கட்டப்படுகின்ற போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற கருத்தை உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டு அதன் பிரகாரம் சட்டத்தரணிகள் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்ததன் இறுதி தீர்ப்பே (31.08.2023) ல் நடைபெற்றிருந்தது.

இறுதி தீர்ப்பில் தொல்லியல் திணைக்களத்தினுடைய பாராமுகத்தை மூன்று முறைகள் நீதிமன்ற கட்டளைகளை மீறியுள்ளார்கள் என்ற கருத்து உட்பட அங்கே சைவ சமயத்திற்கு மறுப்பு தெரிவிக்காத வகையில் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்தது.

சர்வதேச நடவடிக்கை

நீதிபதி இலங்கை நாட்டிலே தொல்லியல் திணைக்களத்தினுடைய அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அச்சுறுத்தல் பல் வகையில் வழங்கப்பட்டு சட்டமா திணைக்களத்திற்கு வருகை தருமாறு கூறி அங்கே தீர்ப்பை மாற்றி அமைக்கும்படி கூறப்பட்டிருக்கிறது.

இதனை விட புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தீவிரம் , பாதுகாப்பு குறைக்கப்பட்டமை , சரத்வீரசேகர போன்ற இனவாதிகளால் அச்சுறுத்தல்கள் இவ்வாறான சூழ்நிலையில் பதவி விலகல் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நீதிபதிக்கே இந்த நிலமை என்றால் தமிழ் மக்களுக்கு எந்த நிலைமை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேசம் இலங்கை அரசின் போக்குகளிற்கு பொறுப்புக்கூற வைக்க வேண்டும் : து.ரவிகரன் (Photo) | Dhu Ravigaran Speech Mullaitivu Judge Resigns

தமிழ் மக்களை பொறுத்தவரை இருள் சூழ்ந்த நாடாகவே பார்க்கப்படுகின்றது. பெயருக்கு தான் ஜனநாயக சோசலிச குடியரசு நாடாக கூறுகிறார்களே தவிர ஜனநாயகத்தை தேடினாலும் கிடைக்காது.

தமிழர்களாகிய நாங்கள் நசுக்கபடுகிறோம், எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, எமது மதத்தை அழிக்கிறார்கள், பௌத்த மதத்தை திணிக்கிறார்கள், சட்ட விரோத தொழில்களால் கடற்தொழில் செய்ய முடியவில்லை.

காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்படுகின்றன, கனியமணல் அகழப்படுகின்றன, கருங்கல் அகழ்வு , கசிப்பு, கஞ்சா போதைப்பொருட்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு பாடசாலைக்கும் புகுந்து விட்டது. இவ்வாறான நிலமையில் நியாயமான நீதிபதியை வெளியேற்றிவிட்டு நாடு போகும் போக்கு நன்றாகவே தெரிகிறது.

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுபான்மை மக்கள் இனத்திற்கான பாதுகாப்பிற்கான நாடாக நாங்கள் பார்க்கவில்லை. நிச்சயமாக சர்வதேசம் கவனத்தில் எடுத்து சுமூகமான , நியாயமான தீர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு கண்டிப்பாக பொறுப்பு கூற வைக்க வேண்டும் .

அத்துமீறி நடக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

கிழக்கு மாகாணத்தில் இரு வாரங்களாக பால் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் (Photos)

கிழக்கு மாகாணத்தில் இரு வாரங்களாக பால் பண்ணையாளர்கள் தொடர் போராட்டம் (Photos)

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், ஓமான், Oman, Barkingside, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Herne, Germany

20 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
மரண அறிவித்தல்

இமையாணன், பிரான்ஸ், France, Scarborough, Canada

18 Oct, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

சூரியகட்டைக்காடு, நானாட்டான், நானாட்டன்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US