மரணங்கள் நிகழும்போது எல்லை நிர்ணயம் பார்க்க கூடாது: ஜீவன் வேண்டுகோள்(Photos)
பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால், கடந்த வாரத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் அண்மையில் ஹட்டன்,டிக்கோயா நகர சபை மற்றும் நோர்வூட் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றிருந்தது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை ஹட்டனில் இடம்பெற்ற போது ஜீவன் தொண்டமான் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
ஜீவன் தொண்டமானின் வேண்டுகோள்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஹட்டன் ரொத்தஸ் பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது அந்த மரணங்களை ஹட்டன் நகர சபை ஊடாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது .
அதேபோன்று நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தரவளை கொலணியில் மரணங்கள் நிகழும்போது அந்த மரணங்களை நோர்வூட் பிரதேச சபை ஊடாக அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் இவ்விரு சபைகளுக்குறிய பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முறுகல் நிலையை தோற்றுவிக்காது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.
இதற்கமைய, எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் கடந்த வாரத்தில் டிக்கோயா தரவளை கொலணி பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் ஹட்டன்,டிக்கோயா நகர சபை மற்றும் நோர்வூட் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்

இதையடுத்து இவ் விடயம் தொடர்பில் கடந்த (24) ஆம் திகதி காலை ஹட்டன், டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,அதேபோன்று நோர்வூட் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து இரு தரப்புகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றை ஜீவன் தொண்டமான் தலைமையில் நடத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி
ராமேஸ்வரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல்,
முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிலிப்குமார், நகரசபை பிரதேச சபைகளின்
தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் ஹட்டன் நகர வர்த்தகர்கள் உட்பட பலர்
கலந்துக்கொண்டுள்ளனர்.
https://tamilwin.com/article/jeevan-thondaman-mb-in-sri-lanka-parliament-1661410775

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
