சர்வதேச அரங்கில் ஜீவன் தொண்டமானுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) இளம் உலகளாவிய தலைவராக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கௌரவ அறிவிப்பானது நேற்றையதினம் (04.04.2024) வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கௌரவத்தை பெறும் முதல் இலங்கை அமைச்சர் என்ற பெருமையை ஜீவன் தொண்டமான் பெற்றுள்ளார்.
சுத்தமான நீர் அணுகல்
உலகப் பொருளாதார மன்றமானது எதிர்காலத்தை கட்டியமைக்கும் 40 வயதிற்குட்பட்ட தலைவர்களை கௌரவித்து வருகின்றது.

இந்நிலையில், ஜீவன் தொண்டமான், சுத்தமான நீர் அணுகலை மேற்கொண்டதாகவும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காகவும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளதாக உலகப் பொருளாதார மன்றம் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri