நிர்மலா சீதாராமனை சந்தித்த ஜீவன் தொண்டமான்
தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று(19.09.2025) இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு, குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டபோது, தொண்டமான் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆதரவு
நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை நிலைத்தன்மையை அடைய உதவுவதில் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதி உதவி மற்றும் கடன் உதவிகள் முதல் மேம்பாட்டு ஒத்துழைப்பு வரை இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட உதவிகள் குறித்தும் இந்த சந்திப்பு விவாதித்துள்ளது.
அத்தோடு, இந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் தொண்டமான் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



