தமிழக முதலமைச்சருடன் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Tamilnadu Universities Jeevan thondaman Political protest
By Independent Writer Sep 02, 2021 08:08 AM GMT
Report

தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழகத்தின் முதலமைச்சர் மு.கா ஸ்டாலினை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது தமிழ் நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகக் காங்கிரஸின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதா இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் மலையகத்தில் அமையவுள்ள பல்கலைக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பாக விரிவாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செய்வதற்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் இந்திய சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு ,தொழில் வாய்ப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பாக நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம்மக்களுக்கு அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதாகவும், இத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கும் பரிந்துரைப்பதாகவும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமுர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பில் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய வம்சாவழி மக்களை பிரதிநிதிப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமிடையிலான உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்திய அரசாங்கத்தின் மூலமும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூலமும் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளது. 

Gallery
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US