இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை (Photos)
மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று (07.02.2023) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது, நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் தற்போதைய நிலவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
மலையக மக்களுக்கான பொருளாதாரம்
அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை
உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும்
வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
