ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேச்சு
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ள நிலையில் குருஜியின் அதிதியாக பெங்களுரூ (Bengaluru) சென்றிருந்த அமைச்சர் அவரை இன்று (11.05.2024) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவரித்துள்ளதோடு மலையக சமூக மாற்றத்தில் இது முக்கிய திருப்பமாக அமையுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாழும் கலை நிறுவனத்தின் கீழ், பிரஜா சக்தி, தொண்டமான் அறக்கட்டளை போன்றவற்றின் ஊடாக எமது மக்களுக்கு தொழில் பயிற்சி, தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு இதன்போது அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நீர்வளத்துறை பற்றியும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தைச் சேர்ந்த செல்லையா கோபாலன் என்ற கலைஞர் வரைந்த ஓவியத்தை குருதேவிடம் அமைச்சர் நினைவு பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam