பிரபல அரசியல்வாதியை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்து போலி ஆவணங்களை தயாரித்து அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரே இந்த மோசடியின் பின்னணியில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்துள்ள பொலிஸார்
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு ஜிப் வண்டி ஒன்று நாரஹேன்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பொலிசார் அந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்த வாகனத்தை விற்பனை செய்வதற்கு ஆயத்தமாக இருந்த நாட்டின் பிரதான வாகன காட்சியறை ஒன்றின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரபல அரசியல்வாதி இந்த வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இந்த அரசியல்வாதி போலி தகவல்களை உள்ளடக்கி வாகனங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
