பல்வகையான பிரதிலாபகங்களுடன் ஜயகமு ஸ்ரீலங்கா புத்தளத்தில்
டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் தொழிலாளர்களை உருவாக்குவாக்கும் திட்டமான ஜயகமு ஸ்ரீலங்கா இம்முறை புத்தளத்தில் இடமபெறவுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் இத்தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜுன் 14,15ஆம் திகதிகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜயகமு ஸ்ரீ லங்கா
இது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியியட்டுள்ள அறிக்கையில்,
“ஜயகமு ஸ்ரீ லங்கா' மக்கள் நடமாடும் சேவையானது இன்றுவரை பதின்னாறு மாவட்டங்களில் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து இணை நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து நடத்தும் இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன.

குறிப்பாக, உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு/சம்பளம்/காப்புறுதி தொடர்பான சேவைகள் சிரம வசன நித்தியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், EPF/ETF தொடர்பான சேவைகள் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மீண்டும் வெளிநாட்டு செல்ல முடியாதுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு சுயதொழிலுக்கான நிதி உதவித்திட்டம், புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு கௌவரம் வழங்கும் "ஹரசர" திட்டம், தொழில்முறை கௌரவத்திற்கு "கருசருத்" திட்டம், புதியதாக சிந்திக்கும் இளைஞர்களுக்கு "SMART YOUTH CLUB" ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்டுகள் கையளித்தல், ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற பல சேவைகள் எனவே இதனால் பதுளை மாவட்ட மக்கள் வெகுவாகப் பயனடையாவர்கள்.
நடமாடும் சேவை
மேலும், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளன.

எனவே, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மற்றும் அதன் இணை நிருவனங்களின் கொழும்பு பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகள் சிலவற்றை இப்பகுதி மக்கள் இந்த நடமாடும் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam