புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்தில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah) படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரிட் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
200 விக்கெட்டுகள்
குறித்த பட்டியலில் வக்கார் யூனிஸ் முதலாவது இடத்திலும், டேல் ஸ்டெய்ன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் ககிசோ ரபாடா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வக்கார் யூனிஸ் 7,725 பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டேல் ஸ்டெய்ன் 7,848 பந்துகளிலும், ககிசோ ரபாடா 8,153 பந்துகளிலும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
