மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பும்ரா..! வெளியிடப்பட்டுள்ள காணொளி
ஜஸ்ப்ரித் பும்ரா(Jasprith Bumrah) தற்போது மும்பை அணியுடன் இணைந்துள்ளதாக மும்பை நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு கடந்த ஜனவரி 3ஆம் திகதி சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயம் ஏற்பட்டது.
மும்பை அணி
காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார்.
இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இவர் இல்லாததால் நடப்பு சீசனில் மும்பை அணி(MI) 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
𝑹𝑬𝑨𝑫𝒀 𝑻𝑶 𝑹𝑶𝑨𝑹 🦁#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/oXSPWg8MVa
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணி காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஆனால், ஏப்ரல் 7ஆம் திகதி பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |