ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஜப்பானின் (Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa) மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

கலந்துரையாடல்களின் உள்ளடக்கம்
இலங்கையில் ஜப்பான் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களின் தற்போதைய நிலை, இலங்கையின் புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவியை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri