யாழ். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விருப்பம் வெளியிட்டுள்ள ஜப்பானிய நிறுவனம்
யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி
இந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு குறிப்பாக கவனம் செலுத்துவதாக சசகாவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொது சுகாதாரம், கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதில் நிப்பொன் அறக்கட்டளை பங்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்துள்ளார்.
இதற்கிடையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam