உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க ஜப்பானிய நிறுவனங்கள் முக்கிய தீர்மானம்
ஜப்பானிய நிறுவனங்களிடையே நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் 'குறுக்கு-பங்குதாரர்' (Cross-shareholdings) முறையைக் கைவிடுமாறு முதலீட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் பங்குகளைப் பரஸ்பரம் வைத்திருக்கும் இந்த முறையானது, நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதாகவும், முக்கிய முடிவுகளில் தன்னிச்சையான போக்கை ஊக்குவிப்பதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இதன் விளைவாக, டொயோட்டா போன்ற முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது பிற நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.
வெறும் பூங்கொத்துகளுடன் முடிந்துவிடாது மகளிர் தினம் - பெண்களின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர்
தீவிரமான தலையீடு
முதலீட்டாளர்களின் இந்த தீவிரமான தலையீடு, ஜப்பானிய பங்குச் சந்தையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தவும், பங்குதாரர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரவும் இந்த நடவடிக்கை உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும், கோர்ப்பரேட் நிர்வாகத்தில் சர்வதேச தரத்தைப் பின்பற்றுவதற்கு ஜப்பான் எடுத்து வரும் இந்த முயற்சி, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.