திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்
இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் (Isomatta Akkio) திருகோணமலை - மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயம் நேற்று (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பூர் - பெரிய குளம்
இதன்போது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் - பெரிய குளத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இக்குளமான 9.4 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு சம்பூரிலுள்ள ஏனைய இரண்டு குளங்களை புனரமைப்பு செய்வதற்காக சம்பூர் கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |