இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்றும் ஜப்பான் வழித்தடம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Japan
By Rakesh Feb 18, 2026 03:05 AM GMT
Report

இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட 'இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை' (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானியப் பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ டகெஹிகோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், நேற்று(17.02.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர்.

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

பெருமளவிலான உற்பத்திகளுக்கான முதலீடுகள்

கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்றும் ஜப்பான் வழித்தடம் | Japan Transform Sri Lanka Into Regional Export Hub

ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக சாத்தியக்கூறுகளை ஆராய ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டுத் தொழில்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த முன்மொழியப்பட்ட வழித்தடத்தின் மூலம், சர்வதேச ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்ட பெருமளவிலான உற்பத்திகளுக்கான முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பதே பிரதான நோக்கமாகும்.

ஜப்பானிய வர்த்தகச் சமூகம்

இத்திட்டத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்.

பிராந்திய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் முதலீட்டுத் துறையில் ஜப்பானிய வர்த்தகச் சமூகத்தினரிடையே மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்றும் ஜப்பான் வழித்தடம் | Japan Transform Sri Lanka Into Regional Export Hub

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசொமாடா, ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் புமிஹிகோ கொபயாஷி உள்ளிட்ட ஜப்பானியப் பிரதிநிதிகளும், இலங்கையின் சார்பில் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US