விமான நிலைய விரிவாக்கப் பணி உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முயற்சிக்கும் ஜப்பானிய நிறுவனம்
அடுத்த வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முனையம் மற்றும் வான்வழி நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாக ஜப்பானிய தாய்சே நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானைத் தளமாகக் கொண்ட பொறியியல் குழுவான தாய்சே நிறுவனம் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை நிறுத்துவதற்கான விவாதங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கான நிதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடன்களை செலுத்த முடியாத நிலையில் இலங்கை

இந்த முனையம் மற்றும் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இலங்கை தாம் பட்ட கடன்களை செலுத்த முடியாது என்று அறிவித்த நிலையில் அண்மையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான ஜெய்க்கா, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதியை இடைநிறுத்தியது.
இதனையடுத்தே இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு தாய்சே நிறுவனம், இலங்கை அரச விமான நிலைய இயக்குநருடன்; பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளது.
இதன்படி நிதி நிலைமை மேம்படவில்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் தனது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
| கப்பலை அனுமதிக்க இலங்கையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் விபரங்களை வெளியிட மறுத்துள்ள சீனா! |
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam