இலங்கையில் மீண்டும் திட்டங்களை ஆரம்பிக்கும் ஜப்பான்
இருதரப்பு கடன் மறுசீரமைப்பின் மற்றுமொரு நன்மையைக் குறிக்கும் வகையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் தமது திட்டங்களை மீள ஆரம்பிக்கவுள்ளது.
இது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ( Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் உதவிகள்
விமான நிலையத் திட்டத்தில் சீன நிறுவனங்களின் ஆர்வம் இருந்தபோதிலும், ஜப்பானுடனான ஒப்பந்தக் கடமைகள் காரணமாக, ஜப்பானிய நிறுவனங்களுக்கு, அந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானின் வெளியுறவு அமைச்சரையும் சந்தித்து ஜப்பானின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
