ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் தயார்: பாதுகாப்பு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஹோர்முஸ் நீரிணையில் ஒருவேளை போர் நிறுத்தம் எட்டப்பட்டால், அங்குள்ள கடல்சார் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதை ஜப்பான் பரிசீலிக்கலாம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜப்பானுக்குத் தேவையான மசகு எண்ணெய்க்கு இந்தப் பகுதியையே அந்த நாடு பெரிதும் நம்பியுள்ளது.
ஜப்பான் தயார்
தற்போதைய ஜப்பானிய சட்டங்களின்படி, ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு கடல் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம்.

எனினும், போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பும் பட்சத்தில், சர்வதேச சமூகத்திற்கு உதவும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஜப்பான் ஈடுபட வாய்ப்புள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri