ஜப்பானில் தேர்தல் தோல்வியால் AI-யை தலைவராக்கவுள்ள அரசியல் கட்சி
ஜப்பானை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி ஏ.ஐயை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறியுள்ளார்.
புதிய தலைவர்
இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

The Path to Rebirthஇன் கட்சி கடந்த ஜனவரியில் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு
2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான நிகழ்நிலை பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார்.

இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கட்சி ஏ.ஐயை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது. எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது என கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri