ஜப்பானில் 379 பயணிகளுடன் மயிரிழையில் உயிர் தப்பிய விமானத்திலிருந்த பயணிகளின் திகில் நிமிடங்கள்
ஜப்பானில் நேற்று இடம்பெற்றிருந்த விமான விபத்தில் விமானத்திலிருந்த அனைவரும் உயிர் தப்பினார்கள் என்பது வழமைக்கு மாறான கற்பனைக்கு அப்பாற்றபட்ட விடயமாக பார்க்கப்படுகிறது.
ஏ350 ஜப்பான் எயர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் தரையிரங்கியபோது அங்கிருந்த கடலோர காவல்படையின் விமானத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இருப்பினும் விமானத்தில் இருந்த 379 பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதன் விமானி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
HOW TO SURIVE A PLANE CRASH
— A Fly Guy's Crew Lounge (@AFlyGuyTravels) January 2, 2024
Passengers on a Japan Airlines flight today were moments away from death, but this is what they did correctly to stay alive!
Follow @AFlyGuyTravels for more#aviationsafety #cabincrew #flightattendant #japanairlines pic.twitter.com/J4eajqyq9s
விமானத்தின் உட்பகுதியை சூழ்ந்த புகைமண்டலம்
தரையிரங்கிய அந்த நொடி அதாவது விபத்து ஏற்பட்ட போது பயணிகள் விமானத்திலிருந்த அனைவரும் ஒரு நொடி நரகத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும்போது ஏதோ ஒன்றுடன் மோதியதை உணர்ந்ததாகவும் ஜன்னலிற்கு வெளியே தீப்பொறியை கண்டேன் பின்னர் விமானத்தின் உட்பகுதியை புகைமண்டலம் சூழ்ந்துகொண்டது என பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமானத்தின் உட்புறம் முழுவதையும் ஒருசில நிமிடங்களில் புகைமண்டலம் சூழ்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் தரையிறங்கியதும் தீப்பரவல் தீவிரமடைந்ததால் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்ததாகவும் அதில் பலர் உயிர் பிழைக்க வழி இல்லை என்பதை உணர்ந்ததாகவும் மற்றுமொரு பெண் பயணி தெரிவித்துள்ளார்.
#Video: Passengers escape from a burning JAL flight at Tokyo's Haneda airport today, after it collided with a Japan Coast Guard plane. All the passengers and crew from the JAL flight survived, but several of the coast guard crew are missing.#Japan #MassiveFire #TokyoAirport… pic.twitter.com/3uFVVMXiK4
— Europe Cognizant (@EuropeCognizant) January 2, 2024
நவீன தொழில்நுட்பம்
இவ்வாறான திகில் நிமிடங்களிலும் விமானத்திலிருந்த பயணிகள் விமான பணிப்பெண்களின் அறிவித்தலுக்கமைய செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டமைக்கு மிகச்சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட்ட பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் நவீன தொழில்நுட்பமுமே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தரையிறங்குவதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்பதோடு அதன்பின் விமான ஓடு பாதையில் மற்றொரு விமானம் வந்தது எப்படி என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு விமானங்களும் எப்படி, எந்த நேரத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன என்பதை கண்டறிய விமான கட்டுப்பாட்டாளர்களுன் விசாரணை நடந்து வருவதாக கடலோர காவல்படை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |